சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி கமிஷனர் மீது ஜனாதிபதியிடம் புகார்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கோரிக்கைகுறித்து பேச கமிஷனர் கார்த்திகேயனை அழைத்தும் வராததால் தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தை மதிக்கவில்லை என்று கூறி அதன் தலைவர் வெங்கடேசன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.மாநகராட்சியில் ஜூலை 12ல் தொடர் துாய்மை பணிகளில் அதிக வேலை வாங்குவது, ஊதியம் தருவதில் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை

மதுரை:மதுரை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கோரிக்கைகுறித்து பேச கமிஷனர் கார்த்திகேயனை அழைத்தும் வராததால் தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தை மதிக்கவில்லை என்று கூறி அதன் தலைவர் வெங்கடேசன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

மாநகராட்சியில் ஜூலை 12ல் தொடர் துாய்மை பணிகளில் அதிக வேலை வாங்குவது, ஊதியம் தருவதில் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பணியாளர்களுடன் கோரிக்கைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கமிஷனர் கார்த்திகேயனையும் பேச அழைத்தும்அவர் வர மறுத்ததாக கூறி அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டார்.

வெங்கடேசன் கூறியதாவது: அன்று மூன்று முறை கமிஷனரை பேச அழைத்தேன். நான்காவது முறை அழைத்த போது வந்தார். பேசிக் கொண்டிருந்த போதே பாதியில் அவமதித்து சென்றதால் தர்ணா செய்தேன். இதுகுறித்து ஜனாதிபதி, தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக கவர்னர், முதல்வர், தலைமை செயலளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X