சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரைமட்ட தொட்டி கட்டும் பணிகழிவுநீர் தேங்கியதால் தாமதம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர்,: திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி மேற்கு பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத்தொட்டி கட்டி, அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிட்டு பணி துவங்கியது. இதற்காக, மிகப்பெரிய அளவில் குழி தோண்டப்பட்டது.ஆனால், சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்க

திருப்பூர்,: திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி மேற்கு பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத்தொட்டி கட்டி, அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிட்டு பணி துவங்கியது.

இதற்காக, மிகப்பெரிய அளவில் குழி தோண்டப்பட்டது.ஆனால், சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்க துவங்கியது.ஒரு வழியாக, மாற்று வழி ஏற்படுத்தி கழிவுநீர் திருப்பி விடப்பட்டது. அங்கு தேங்கிய கழிவுநீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.அதனால், தொட்டி கட்டுமான பணிகள் சுறுசுறுப்பாக நடந்தது. அதற்குள், மீண்டும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், தொட்டி கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை முற்றிலும் அகற்றி, மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X