பொது செய்தி

தமிழ்நாடு

எந்த ஊருக்கு துாக்கி அடிப்பாங்களோ?

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொருவராக, 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டு வருகின்றனர். அதனால், 'எந்த ஊருக்கு துாக்கி அடிப்பார்களோ' என்கிற அச்சத்தில், மற்ற அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு அதிகாரிகள் மாற்றம் படிப்படியாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில், முதலில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் மாற்றப்பட்டார்.

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொருவராக, 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டு வருகின்றனர். அதனால், 'எந்த ஊருக்கு துாக்கி அடிப்பார்களோ' என்கிற அச்சத்தில், மற்ற அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு அதிகாரிகள் மாற்றம் படிப்படியாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில், முதலில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் மாற்றப்பட்டார். சமீபத்தில், துணை கமிஷனர் மதுராந்தகி மாற்றப்பட்டார்.நகர் நல அலுவலர் ராஜா, மதுரைக்குச் செல்கிறார். கல்வி அலுவலர் வள்ளியம்மாள், பள்ளி கல்வித்துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதேபோல், மற்ற துறை உயரதிகாரிகளும் மாற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு, மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், நகரமைப்பு பிரிவில் முறைகேடு அதிகரித்து விட்டதால், அப்பிரிவை கலைத்து விட்டு, புதியவர்களை நியமிக்கக்கோரி, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கட்டுமான துறையினர் ஏற்கனவே, கோரிக்கை மனு கொடுத்தனர். இத்தகவல், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பொறியியல் பிரிவினர் தரமின்றி பணிகள் மேற்கொள்வது; மதிப்பீட்டை அதிகரித்துக் காட்டுவது; கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடு களுக்கு உடந்தையாக இருந்ததாக, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.

தரமின்றி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, கள ஆய்வுக்குச் செல்லும்போது, கமிஷனரே நேரில் பார்க்கிறார்.மாமன்ற கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களை, இணையத்தில் வெளியிடப்படும் போது, இதற்கு முன் செய்யப்பட்ட டெண்டர் முறைகேடு, தேவையற்ற பணிகள் செய்தது, செய்யாத பணிகளுக்கு நிதி எடுத்தது உள்ளிட்டவை, வெளிச்சத்துக்கு வந்துள்ளன.இச்சூழலில், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்ட பணிக்கு பூமி பூஜை நடத்தியது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள், வேலுாருக்கும், மதுரைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.அதனால், மாநகராட்சியின் மற்ற பிரிவு அதிகாரிகள், 'எந்த ஊருக்கு துாக்கி அடிப்பார்களோ' என்கிற அச்சத்தில் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X