சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கள்வர்' நடமாட்டம் அதிகரிப்பு காளம்பாளையம் மக்கள் அச்சம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் வழிப்பறி திருடர்கள் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் ஏராளமான வீடுகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த மக்கள் தங்கி, பனியன் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.இப்பகுதியில் சமீப காலமாக டூவீலரில் வலம் வரும் வழிப்பறி

திருப்பூர் : திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் வழிப்பறி திருடர்கள் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் ஏராளமான வீடுகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த மக்கள் தங்கி, பனியன் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.இப்பகுதியில் சமீப காலமாக டூவீலரில் வலம் வரும் வழிப்பறி திருடர்கள், மக்களை மிரட்டி, நகை, பணம், மொபைல் போன் உள்ளிட்டவை பறித்து செல்கின்றனர். இல்லாவிடில், வாகனங்களை துாக்கி செல்கின்றனர்.நேற்று, டூவீலரில் வந்த, இருவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு, வேகமாக தப்பி சென்றனர்.
இது தொடர்பாக, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. வழிப்பறி திருடர்களின் தொல்லையால், மக்கள் ரோட்டில் தனியாக நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, பெருமாநல்லுார் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, வழிப்பறி திருடர்களை கைது செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X