பொது செய்தி

தமிழ்நாடு

பேங்கில் வேலை என்று கம்பத்தில் போஸ்டர்: சிக்கினால் இளைஞர்கள் சீரழிய வேண்டியதுதான்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : வங்கியில் வேலைவாய்ப்பு என்று விளம்பரப்படுத்தி, இன்சூரன்ஸ் ஏஜென்டுக்கு ஆட்களை எடுத்து மோசடி நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோவையில் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில், தேசிய அளவில் மக்களால் முன்னுரிமை அளிக்கப்படும் வங்கியின் கிளை அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் புதியதாக துவங்க இருப்பதாகவும், இதற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றும்,
 பேங்கில் வேலை என்று கம்பத்தில் போஸ்டர்: சிக்கினால் இளைஞர்கள் சீரழிய வேண்டியதுதான்

கோவை : வங்கியில் வேலைவாய்ப்பு என்று விளம்பரப்படுத்தி, இன்சூரன்ஸ் ஏஜென்டுக்கு ஆட்களை எடுத்து மோசடி நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவையில் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில், தேசிய அளவில் மக்களால் முன்னுரிமை அளிக்கப்படும் வங்கியின் கிளை அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் புதியதாக துவங்க இருப்பதாகவும், இதற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், மொபைல்போன் எண்ணுடன் சுவரொட்டி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுபோன்று விளம்பரப்படுத்தி, எந்த வங்கியிலும் ஆட்களை மறைமுகமாக எடுக்க மாட்டர்கள் என்றும், வங்கி வேலை என்று சொல்லி, ஆட்களை எடுத்து இன்சூரன்ஸ் ஏஜன்ட் பணிக்கு சேர்க்கிறார்கள் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:வங்கியில் வேலை என்று நுாதனமாக விளம்பரப்படுத்துகின்றனர். உண்மையில் எந்த வங்கியிலும் இதுபோன்று பகிரங்கமாக, யாருக்கும் வேலை கொடுக்க முடியாது.இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு ஆட்களை எடுக்க, மக்களை இதுபோன்று வங்கி வேலை என்று திசை திருப்பி மோசடி செய்கின்றனர்.இது, காப்பீட்டு துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிமுறைப்படி தவறாகும். வங்கி வேலை என்ற பெயரில், மக்களை ஏமாற்றுகின்றனர்.இதை நம்பி செல்லும் நபர்களிடம், முன் தொகை பெற்று கொண்டு, ஏஜென்டுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி கொடுக்கின்றனர்.

பின், வேலையை உறுதி செய்ய வேண்டும் என்றால், மூன்று பாலிசிகளை சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். பாலிசி பிடித்து கொடுத்ததும், இவர்களை விடுவித்து விடுகின்றனர். வேறு புதிய நபர்களை, இதேபோன்று வங்கி வேலை என்று எடுக்கின்றனர். இவர்களின் விளம்பரத்திலேயே ஓய்வு பெற்றவர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தேவை என்று குறிப்பிடுகின்றனர். வங்கியில், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.


கல்லுாரிகளில் வேலை


இதேபோன்று கல்லுாரிகளில் வேலைவாய்ப்பு முகாம் என்று நடத்தி, வேலை தேடும் மாணவர்களை அழைத்து சென்று ஏமாற்றுகின்றனர்.மாத சம்பளம் என்று அழைத்து சென்று, பாலிசி எடுக்க சொல்லி ஏமாற்றுவதால், பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. இதுபோன்று மோசடிகளை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X