பொது செய்தி

தமிழ்நாடு

மின்வசதியின்றி வீடு ஒப்படைத்த கட்டுமான நிறுவனத்துக்கு 'குட்டு'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சென்னை:மின் இணைப்பின்றி வீடுகளை விற்ற கட்டுமான நிறுவனத்துக்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் 'குட்டு' வைத்துள்ளது.குன்றத்துாரில் தனியார் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில், 944 வீடுகள் பல்வேறு பிளாக்குகளாக கட்டப் பட்டன.குறிப்பிட்ட காலத்தில் மின், தண்ணீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அந்நிறுவனம்

சென்னை:மின் இணைப்பின்றி வீடுகளை விற்ற கட்டுமான நிறுவனத்துக்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் 'குட்டு' வைத்துள்ளது.

குன்றத்துாரில் தனியார் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில், 944 வீடுகள் பல்வேறு பிளாக்குகளாக கட்டப் பட்டன.குறிப்பிட்ட காலத்தில் மின், தண்ணீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அந்நிறுவனம் வீடுகளை ஒப்படைக்கவில்லை என, புகார் எழுந்தது.பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்தையும், ரியல் எஸ்டேட் ஆணையத்தையும் அணுகினர்.

ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஞனதேசிகன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:மின் இணைப்பு போன்றவை வீடு வாங்குவோருக்கு அடிப்படை உரிமையாக உள்ளன. அதையே இந்த கட்டுமான நிறுவனம் சரிவர நிறைவேற்றவில்லை.இத்திட்டத்தில் 604 வீடுகள், ஒரு முனை மின் இணைப்புடன் சில மாதங்களுக்கு முன் ஒப்படைக்கப்பட்டது.

எஞ்சிய 340 வீடுகளுக்கு, டீசல் ஜெனரேட்டர் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை வீட்டு உரிமையாளர்களிடம் கேட்கக் கூடாது.இந்த வீடுகளுக்கு, இரண்டு வாரங்களுக்குள் முறையான மின் இணைப்பு வழங்க வேண்டும். முழுமையாக மின் இணைப்புக்கு, அந்த வளாகத்தில் உரிய நிலத்தை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X