போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு பயிற்சி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு பயிற்சி

Added : ஜூலை 22, 2021
Share
சென்னை:'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதிகளை நியமிக்கும் முன், உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இவர் மீது போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்

சென்னை:'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதிகளை நியமிக்கும் முன், உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இவர் மீது போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஓராண்டும் விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்கும்படி, 2021 ஜனவரியில் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வெங்கடாச்சலம் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, 12க்கு மேல் இருந்தால், அதற்கான பிரிவின்படி மூன்று ஆண்டு தண்டனையும், 12 வயதுக்கு கீழ் இருந்தால் ஐந்து ஆண்டு தண்டனையும் என, சட்டத்தில் உள்ளது. அதன்படி பார்த்தால், 12 வயதுக்கு கீழான சிறுமியிடம் குற்றம் புரிந்துள்ளார்.விசாரணை நீதிமன்றம், சிறுமியின் வயதை சரியாக கவனிக்க தவறி விட்டது. அதனால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டும், மிரட்டல் பிரிவில் ஓராண்டும் தண்டனை விதித்து, அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதில் மாற்றம் செய்து, இரண்டு சட்டப் பிரிவின் கீழும் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்படுகிறது. மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்கும் முன், மாநில ஜுடிஷியல் அகடமி வாயிலாக உரிய பயிற்சி அளிக்க வேண்டும். தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று, இதற்கான உரிய நடவடிக்கையை பதிவாளர் ஜெனரல், அகடமி இயக்குனர் எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X