பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி வாசலில் கனவுடன் மாணவர்கள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில், உயர்க்கல்விக்கு விண்ணப்பிக்க பல கல்லுாரிகளுக்கு மாணவ, மாணவிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த, 19ம் தேதி வெளியானது. மாணவர்களின் மதிப்பெண் விபரம் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் கல்வி படிக்க, 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு

திருப்பூர் : பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில், உயர்க்கல்விக்கு விண்ணப்பிக்க பல கல்லுாரிகளுக்கு மாணவ, மாணவிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த, 19ம் தேதி வெளியானது. மாணவர்களின் மதிப்பெண் விபரம் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் கல்வி படிக்க, 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்த நிலையில், மாணவர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில் சேர இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள பல அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவு, சீட்டுகள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விசாரிக்க, கல்லுாரிக்கே நேரடியாக வந்தவண்ணம் உள்ளனர்.நேரில் வர வேண்டாம்உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கைக்கு யாரும் நேரில் வரவேண் டாம். கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும். சேர்க்கை குறித்த அறிவிப்பு மாணவர்களுக்கு தெரிவித்து ஆன்லைனிலேயே சேர்க்கை நடைபெறும் எனக்கூறி திருப்பி அனுப்பிவைக்கிறாம்.அரசு வழிகாட்டுதலின்கீழ், உரிய இடஒதுக்கீடு வழங்கி நடத்தப்படும். அனைவரும் பாஸ் என்பதால் இந்த ஆண்டு கல்லுாரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது' என்றனர்.'ஆன்லைனில்' பதிவு


இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் (2021-22) சேர்க்கைக்கான, விண்ணப் பங்களை www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள, 150 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X