பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு குறைகிறது; சுகாதாரத்துறையினர் நிம்மதி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று இரட்டை இலக்கமாக குறைந்துள்ளது. கடந்த மே மாத இறுதியில், 2 ஆயிரமாக இருந்த மாவட்டத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, ஜூன் துவக்கத்தில், ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஜூன் 17ல், பாதிப்பு, 500க்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து, ஒரு மாதமாக படிப்படியாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு, 150 முதல், 100 என்ற நிலையில் தொடர்ந்தது.மாவட்ட

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று இரட்டை இலக்கமாக குறைந்துள்ளது.

கடந்த மே மாத இறுதியில், 2 ஆயிரமாக இருந்த மாவட்டத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, ஜூன் துவக்கத்தில், ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஜூன் 17ல், பாதிப்பு, 500க்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து, ஒரு மாதமாக படிப்படியாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு, 150 முதல், 100 என்ற நிலையில் தொடர்ந்தது.மாவட்ட கொரோனா பாதிப்பு குறைந்ததால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையினர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.மாவட்டத்தில், 97 பேருக்கு தொற்று உறுதியானது.

132 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை, 86 ஆயிரத்து, 916 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 84 ஆயிரத்து, 539 கொரோனாவில் இருந்து நலம் பெற்றுள்ளனர்.தற்போது சிகிச்சையில், 1,562 பேர் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில், 815 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X