உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன் உயிரிழந்த 108 வயது முதியவர்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுடில்லி,:தன் நிலமோசடி வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன் 108 வயதான முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சோபன் நரசிங்க கைக்வாட் 108 என்பவர் 1968ல் ஒரு காலி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். பின் அந்த நிலம் வங்கியில் பெற்ற கடனுக்காக அதன் உரிமையாளரால் அடமானம்

புதுடில்லி,:தன் நிலமோசடி வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன் 108 வயதான முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சோபன் நரசிங்க கைக்வாட் 108 என்பவர் 1968ல் ஒரு காலி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். பின் அந்த நிலம் வங்கியில் பெற்ற கடனுக்காக அதன் உரிமையாளரால் அடமானம் வைக்கப்பட்டிருந்தது கைக்வாட்டிற்கு தெரியவந்தது.இதையடுத்து 1982ல் கைக்வாட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கைக்வாட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

எனினும் 1987ல் நிலத்தின் உரிமையாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் தன் முந்தைய உத்தரவை திரும்பப்பெற்றது.இதை எதிர்த்து மும்பை உயர் நீதி மன்றத்தில் கைக்வாட் மீண்டும் மேல்முறையீடு செய்தார். எனினும் அந்த மனு 2015ல் தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கைக்வாட் தரப்பு மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் தாக்கல் செய்தது.

கிராமப்புறத்தில் வசித்து வந்த கைக்வாட்டிற்கு உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து தாமதமாக தெரியவந்ததாலும் பின் கொரோனா பரவல் காரணமாகவும் விரைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட இயலவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ஜூலை 12ம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதித்தது. எனினும் அதற்கு முன்பே உடல்நலக்குறைவால் கைக்வாட் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.பின் இந்த மனு தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க எதிர் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X