பொது செய்தி

தமிழ்நாடு

ஈகை திருநாள் கொண்டாடி உவகை பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பகுதியில் நேற்று பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த ரம்ஜான் மற்றும் கடந்தாண்டு பக்ரீத் பண்டிகையின் போது, பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்திக் கொண்டனர். இந்தாண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் நேற்று பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த ரம்ஜான் மற்றும் கடந்தாண்டு பக்ரீத் பண்டிகையின் போது, பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்திக் கொண்டனர். இந்தாண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் பள்ளி வாசல்கள் மற்றும் வழக்கமான பகுதிகளில் தொழுகை நேற்று நடைபெற்றது.

திருப்பூர், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகம், முனிசிபாலிடி ரோடு, ராயபுரம், காதர்பேட்டை, அல் அமீன், மரக்கடை சந்து, பெரிய கடை வீதி, கோம்பை தோட்டம் ஆகிய இடங்கள் உட்பட ள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடன், உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கியும், விருந்து அளித்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X