பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு தேர்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : போலீஸ், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற, மருத்துவ சான்றுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு, திறனறித் தேர்வுகள் வரும், 26 முதல், ஆக., 6ம் தேதி வரை

கோவை : போலீஸ், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற, மருத்துவ சான்றுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு, திறனறித் தேர்வுகள் வரும், 26 முதல், ஆக., 6ம் தேதி வரை நடக்க உள்ளன.கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம், ஆயுதப்படை மைதானத்தில் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அழைப்பு கடிதம் பெறாதவர்கள், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் அணிக்கு, காலை, 6:00 மணிக்கும், இரண்டாம் அணிக்கு காலை, 9:00 மணிக்கும் தேர்வுகள் நடக்கும்.தேர்வில் பங்கேற்க வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றுடன் வரவேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும், கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும் கொண்டு வரவேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X