பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய கலைகளை தாங்கி நிற்கும் தமிழகம்!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''தமிழர்களின் பாரம்பரிய வரலாறு நாட்டுப்புற கலைகள் மூலமாகத்தான், அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது,'' என, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி பேசினார். திருப்பூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க துவக்க விழா, தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சத்யராஜ் தலைமை

திருப்பூர் : ''தமிழர்களின் பாரம்பரிய வரலாறு நாட்டுப்புற கலைகள் மூலமாகத்தான், அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது,'' என, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி பேசினார்.

திருப்பூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க துவக்க விழா, தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார்.காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை அறிவித்தார். தலைவராக சேகர், செயலாளராக கணேஷ், பொருளாளராக மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.முன்னதாக, சிவலிங்கேஸ்வர சுவாமி பேசியதாவது:பழமையும், பாரம்பரியமும் மிகுந்த நம் நாட்டில், இயல், இசை, நாடக கலையை தாங்கி நிற்கும் இடமாக தமிழகம் திகழ்கிறது.

ஆனால், நாட்டுப்புற இசை கலைஞர்களை மறந்து, நிழல்படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனை அளிக்கிறது.நாட்டுப்புற கலைஞர்கள், பாரம்பரிய தமிழ்மொழியை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு, கலையை வளர்க்க தெரிந்தது, வியாபாரம் செய்ய தெரியவில்லை. அரசு சலுகைகள் குறித்த விழிப்புணர்வும் இல்லை.தெருக்கூத்தாக இருக்கும் நாட்டுப்புற கலைகளை, கிராம கலையாக மாற்ற வேண்டும். கோவில் பண்டிகை, நிகழ்ச்சிகளில், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும்.

ஹிந்து அறநிலையத் துறை அம்மன் கோவில்களில், பம்பை, உடுக்கைபடி பாடகர்களை நியமிக்க வேண்டும்.தமிழர்களின் பாரம்பரிய வரலாறு நாட்டுப்புற கலைகள் மூலமாகத்தான், அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.உடுக்கை, பம்பை உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும், தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தமிழர்களின் பாரம்பரிய வரலாறு நாட்டுப்புற கலைகள் மூலமாகத்தான், அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அம்மன் கோவில்களில், பம்பை, உடுக்கைபடி பாடகர்களை நியமிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X