கொரோனாவால் பெற்றோரை இழந்த 1.19 லட்சம் குழந்தைகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:கொரோனாவால் இந்தியாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்கா, இந்தியா உட்பட 21 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில்

வாஷிங்டன்:கொரோனாவால் இந்தியாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

அமெரிக்கா, இந்தியா உட்பட 21 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவால் 14 மாதங்களில் 15 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் களை இழந்து அனாதை ஆகியுள்ளனர்.இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரில் ஒருவர் அல்லது பாதுகாவலராக இருந்த தாத்தா அல்லது பாட்டியை இழந்துள்ளனர்.

10 லட்சத்து 42 ஆயிரம்குழந்தைகள் தந்தை அல்லது தாயை இழந்துஉள்ளனர்.இந்தியாவில் 1லட்சத்து19 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனர்.இவர்களில் 90 ஆயிரத்து75 பேர் தந்தை 25 ஆயிரம் பேர் தாயை இழந்துள்ளனர்.

பெரு, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜென்டினா, ரஷ்யா நாடுகளில் அதிக குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகியுள்ளனர்.இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இழப்பு 0.5 சதவீதமாக உள்ளது. இது அமெரிக்காவில் 1.8 சதவீதமாக உள்ளது.தென்னாப்பிரிக்கா தவிர்த்து இதர நாடுகளில் கொரோனாவுக்கு பெண்களை விட ஆண்கள் அதிகம் பலியாகியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X