பொது செய்தி

தமிழ்நாடு

பற்ற வைத்த நெருப்பொன்று...

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர், ஜூலை 22-'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மரக்கன்று நடப்பட்டு, பசுமையாக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு, பசுமை தொற்று பரவத்துவங்கியுள்ளது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில், விதை போட்ட, 'வனத்துக்குள் திருப்பூர்' இந்தாண்டு, ஏழாவது ஆண்டாக பசுமையை தொடர்ந்து பரப்பி

திருப்பூர், ஜூலை 22-

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மரக்கன்று நடப்பட்டு, பசுமையாக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு, பசுமை தொற்று பரவத்துவங்கியுள்ளது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில், விதை போட்ட, 'வனத்துக்குள் திருப்பூர்' இந்தாண்டு, ஏழாவது ஆண்டாக பசுமையை தொடர்ந்து பரப்பி வருகிறது.மாவட்டத்தில் பல பகுதிகளில் உருவாக்கிய குறுங்காடுகள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் வெற்றியை நாடு முழுவதும் பறைசாட்டி கொண்டிருக்கிறது. ஏழாவது திட்டத்தில், அடர்கவின் காடுகளை உருவாக்கும் நோக்கில், மரக்கன்று நடவு துவங்கியுள்ளது.

இதன், 36 வது நிகழ்ச்சி, வெள்ளகோவில் அருகே மூலனுார் - எரிசினம்பாளையம் தெற்கு தோட்டத்தில் நேற்று நடந்தது. தோட்ட உரிமையாளர் பழனிசாமி, அம்பிகா, அருள்செல்வம் உள்ளிட்டோர், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.நேற்று, 310 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், வெள்ளகோவில் நிழல்கள் அமைப்பினர் பங்கேற்று, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் சாதனைகளையும், இலக்குகளையும் விவரித்தனர்.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X