பொது செய்தி

தமிழ்நாடு

உங்களுக்கு சளி, இருமல் இருக்கா... கேட்டவர்களுக்கு சம்பளம் இல்லை!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சரவணம்பட்டி : நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சளி, இருமல், உண்டா என கணக்கெடுக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்காததால் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோவை மாநகராட்சி சார்பில், கோவை சரவணம்பட்டி பகுதியில் நோய் தொற்று சமயங்களில் சளி, இருமல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதற்கென வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்க, 200 பேர் தற்காலிக சம்பள

சரவணம்பட்டி : நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சளி, இருமல், உண்டா என கணக்கெடுக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்காததால் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சி சார்பில், கோவை சரவணம்பட்டி பகுதியில் நோய் தொற்று சமயங்களில் சளி, இருமல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதற்கென வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்க, 200 பேர் தற்காலிக சம்பள அடிப்படையில், நியமனம் செய்யப்பட்டனர்.இவர்கள் 28, 29, 30, 31 ஆகிய நான்கு வார்டுகளில், பணியாற்றி வருகின்றனர். கடந்த 50 நாட்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, காலம் தாழ்த்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று 15 நாட்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கி உள்ளார்கள்.

மீதமுள்ள ஒரு மாதத்திற்கும் மேலான நாட்களுக்கு, சம்பளம் வழங்க வேண்டும் எனக் கோரி, சரவணம்பட்டி மாநகராட்சி அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால், இன்னும் ஓரிரு வாரங்களில் சம்பளம் பெற்று தருவதாக கூறி சமாதானப்படுத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X