சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறி நாய் கடித்து குதறியது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி நகரில், வெறி நாய் கடித்ததில், நேற்று மாலை வரை, 12 பேர் சிகிச்சை பெற்றனர்.அவிநாசி, கைகாட்டிபுதூர், வட்டார ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து, நேற்று மதியம்,1:30 மணிக்கு, இரண்டு பேர் தெருநாய் கடித்ததாக கூறி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றனர். தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், மங்கலம் ரோடு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட நகரின்

அவிநாசி : அவிநாசி நகரில், வெறி நாய் கடித்ததில், நேற்று மாலை வரை, 12 பேர் சிகிச்சை பெற்றனர்.அவிநாசி, கைகாட்டிபுதூர், வட்டார ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து, நேற்று மதியம்,1:30 மணிக்கு, இரண்டு பேர் தெருநாய் கடித்ததாக கூறி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், மங்கலம் ரோடு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் இருந்து, சில நிமிட இடைவெளியில் நேற்று மாலை, 7:00 மணி வரை, 12 பேர் தெரு நாய் கடித்து விட்டதாக, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதில், இரண்டு பேருக்கு பலமான காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்ததில், ரோட்டில் நடந்து கொண்டிருந்த போது, கறுப்பு நிற நாய் கடித்ததாக கூறியுள்ளனர். வெறி பிடித்த நிலையில், நாய் சுற்றி திரிந்து, வருவோர் போவோரை கடித்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர், பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்த நிலையில், மக்களை கடித்த நாயை கண்காணிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக, தெரு நாய்கள் மக்களை துரத்தி கடித்து வருகிறது. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X