மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மெக்கா : மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் முறையாக பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முஸ்லிம்கள் புனிதமாக கருதும், மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டைப் போலவே, இந்தாண்டும், வெளிநாட்டவருக்கு

மெக்கா : மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் முறையாக பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



latest tamil news



முஸ்லிம்கள் புனிதமாக கருதும், மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டைப் போலவே, இந்தாண்டும், வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


latest tamil news



நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கை களை, பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார்.


latest tamil news



பெண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.ராணுவத்திலும் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், மெக்கா மற்றும் மதீனாவில், பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த, ஏப்.,ல் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.parthiban - coimbatore,இந்தியா
22-ஜூலை-202109:32:29 IST Report Abuse
k.parthiban இதே மாதிரி கண்ணியமான உடை நமது இந்திய பெண் காவலர்களுக்கும் இருக்க வேண்டும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
22-ஜூலை-202107:47:58 IST Report Abuse
சீனி எண்ணெய் விலை இறங்கிய பிறகு, சவுதி பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. டிரைவிங் அனுமதி உட்பட பல வேலைகளுக்கு பெண்களை அனுமதிக்கவில்லை எனில், அரசு செலவு அதிகமாகிவிடும். காலத்திற்க்கு ஏற்ப மாறி வருவது வளைகுடா நாடுகளுக்கும் நல்லதுதான்.
Rate this:
Cancel
பொறியாளன் இளங்கோ., கொங்குநாடு. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும் பர்தாவில் இருந்து விடுதலை மட்டும் கிடைக்காது போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X