பொது செய்தி

தமிழ்நாடு

'ஜைகா' திட்ட பணிகள் மருத்துவ அதிகாரி ஆய்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும், ஜைகா திட்ட பணிகளை, மருத்துவக் கல்வி உதவி இயக்குனர் சபீதா, நேற்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) திட்டத்தின் கீழ், கோவை அரசு மருத்துவமனையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது.இதில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டடத்திற்கு ரூ.110.90 கோடி,

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும், ஜைகா திட்ட பணிகளை, மருத்துவக் கல்வி உதவி இயக்குனர் சபீதா, நேற்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) திட்டத்தின் கீழ், கோவை அரசு மருத்துவமனையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது.இதில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டடத்திற்கு ரூ.110.90 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.189.79 கோடி என மொத்தம், 300.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.இந்நிலையில், மருத்துவ கல்வி உதவி இயக்குனர் சபீதா, நேற்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இதுவரை முடிவடைந்துள்ள பணிகள், மேற்கொண்டு நடக்கவுள்ள பணிகள் குறித்து, மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படாமல் உள்ள பணிகள் மற்றும் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X