சில வரி செய்திகள்... | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...

Added : ஜூலை 22, 2021
Share
'சக் ஷம்' வலியுறுத்தல்திருப்பூர் சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ் செல்வம், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமாரை நேற்று சந்தித்தனர். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளர்களுக்கான சில கோரிக்கைகளை கமிஷனரிடம் தெரிவித்தனர். மாநகராட்சி கட்டடங்கள், திருமண மண்டபங்கள், பிற அரங்குகளில், 2016

'சக் ஷம்' வலியுறுத்தல்திருப்பூர் சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ் செல்வம், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமாரை நேற்று சந்தித்தனர். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளர்களுக்கான சில கோரிக்கைகளை கமிஷனரிடம் தெரிவித்தனர். மாநகராட்சி கட்டடங்கள், திருமண மண்டபங்கள், பிற அரங்குகளில், 2016 மாற்றுத்திறனாளர்கள் உரிமை சட்டத்தின் படி, மாற்றுத்திறனாளர்களுக்கான சாய் தளம், கழிப்பிடம் வசதிகளை செய்து தருதல், தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டடங்களில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.வரிவசூல் மையம் 'லீவு'திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் விடுத்த அறிக்கையில், 'சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் 'சாப்ட்வேர்' பராமரிப்பு பணி, 25ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டலத்திலும் மேற்கண்ட நாட்களில் கணிணி வரி வசூல் மையம் செயல்படாது. மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியது அனைத்து வரி, குத்தகை தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டட அனுமதி கட்டணம் உள்ளிட்ட கட்டண வசூல் பணி நடக்காது. 26ம் தேதி இணையதளத்தில் வரி செலுத்தி கொள்ளலாம்,' என தெரிவித்துள்ளார்.கலெக்டர் திடீர் ஆய்வுதிருப்பூர் மாவட்டத்துக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், 2,800 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க, 16.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தொங்குட்டிபாளையத்தில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில் வாடகை இயந்திர மையமும், ஒரு லட்சம் மானியத்தில் பண்ணை குட்டை, பெருந்தொழுவு ஊராட்சியில், களை எடுப்பான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் மகாதேவன், பொங்கலுார் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முள் மரம் அகற்ற வேண்டும்வெள்ளகோவில் நகராட்சி பகுதியில்காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், தினமும், 50 லட்சம் லிட்டர் குடிநீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதுதவிர, 130க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணற்றில், இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, மேல்நிலை தொட்டி மூலம், பொது குழாய்களில் வினியோகிக்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் பெரும்பாலும், சாலையோரங்களில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல முள் மரங்களை அகற்றினால், மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும் என தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.அரசு பணி வேண்டி மனுதிருப்பூரை சேர்ந்த டிரைவர்கள் செல்வராஜ், மன்சூர் அலி, நடத்துனர் வீரக்குமார் மற்றும் வெள்ளியங்கிரி நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளித்தனர். அதில், 'தற்போது, தனியார் பஸ் இயக்கம் முழுமையாக இல்லாததால், பணி வாய்ப்பு இல்லை. இதனால், குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. எனவே, 'தமிழக முதல்வரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரிவுக்கு, அரசு பணி வழங்க உதவ வேண்டும் என மனு அளித்தோம். ஆனால், பதில் ஏதும் வரவில்லை. எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி, அரசு பணி வழங்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தனர்.டூவீலர் ஏலத்துக்கு அழைப்புதிருப்பூரில் ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 128 டூவீலர் ஏலம் நடக்கிறது. ரயில்வே போலீசார், வடக்கு மற்றும் தெற்கு போலீசார் மூலம் கைப்பற்றப்பட்ட, டூவீலர்கள், வழக்கு முடிந்தும், உரியவர் எடுத்து செல்லவில்லை. இதனால், 128 பைக்குகளும் வரும், 29 ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ஜெகநாதன் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம். ஏலம் விடப்படும் வண்டிகளுக்கு உரிய ஆவணம் வழங்க பரிந்துரைக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.குட்டை துார் வாரலாமே!பொங்குபாளையம் கிளை மா.கம்யூ., சார்பில் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'பொங்குபாளையம் ஊராட்சி, 1வது வார்டு, கருப்பராயன்கோவில் அருகே ஒரு குட்டை உள்ளது. இதில், தற்போது முட்செடிகள், புதர்கள் மண்டியும், மண் மேடு நிறைந்தும் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் இதில் நீர் நிரம்ப வழியில்லை. சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து விட்டது. இந்த குட்டையை துார் வாரி, நீர் நிரம்ப வழி ஏற்படுத்தினால், சுற்றுப்பகுதி கிணறுகள், குடிநீர் கிணறுகள் நீராதாரம் பெறும். இதுகுறித்து பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும், கண்டுகொள்ளவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.அம்மா உணவகம் எங்கே?திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. கட்டுமானம் நடப்பதால், உணவகத்துக்கு செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது. இதனால், அம்மா உணவகம் எங்கே உள்ளது என தெரியாமல், பலர் வெளியிலுள்ள ஓட்டல்களுக்கு செல்கின்றனர். காலை, மதியம் சேர்ந்து நுாற்றுக்கும் குறைவானவர்களே வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் மாநகராட்சிக்கு ஏற்பட்டு விடும். எனவே, 'அம்மா உணவகத்துக்கு செல்லும் வழி' என்ற அறிவிப்பு பலகை வைத்தால், நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.குட்டை துார்வார கடிதம்பொங்குபாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் அப்புசாமி முதல்வருக்கு அனுப்பிய மனுவில், 'பரமசிவம் பாளையம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள குட்டை துார்வாரப்பட்டு, 40 ஆண்டு ஆகிறது. சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால், குட்டையில் மழை நீர் தேங்க வாய்ப்பில்லாததால், நிலத்தடி நீரும் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. சீமை கருவேல மரங்களை அகற்றி, குட்டையை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்,' என கூறியுள்ளார்.பனியன் சங்கம் வலியுறுத்தல்திருப்பூர் அனைத்து பனியன் தொழிலாளர் சங்கம் சார்பில், சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,), சம்பத் (சி.ஐ.டி.யு.,), ராமகிருஷ்ணன் (தொ.மு.ச.,), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), மனோகரன் (எம்.எல்.எப்.,), முத்துசாமி (எல்.பி.எப்.,), ஆகியோர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சென்னையில் சந்தித்து, 'திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்,' என வலியுறுத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர்,' திருப்பூர் வந்து இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட வாங்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X