பொது செய்தி

தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது பந்தல் சாகுபடி: தென்னைக்கு மாறும் விவசாயிகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : ஆள் பற்றாக்குறையாலும், காய்கறிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தாலும், கோவை மாவட்டத்தில், பந்தல் சாகுபடி செய்த விவசாயிகள், தென்னைக்கு மாற தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில், மதுக்கரை, தொண்டாமுத்துார், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரங்களில் பந்தல் காய்கறி சாகுபடி நடந்து வருகிறது.புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் சாகுபடி செய்த விவசாயிகள், தனியாக சங்கம் அமைத்து

கோவை : ஆள் பற்றாக்குறையாலும், காய்கறிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தாலும், கோவை மாவட்டத்தில், பந்தல் சாகுபடி செய்த விவசாயிகள், தென்னைக்கு மாற தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், மதுக்கரை, தொண்டாமுத்துார், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரங்களில் பந்தல் காய்கறி சாகுபடி நடந்து வருகிறது.புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் சாகுபடி செய்த விவசாயிகள், தனியாக சங்கம் அமைத்து மாதம் மூன்று முறை, விலை நிர்ணயமும் செய்து வந்தனர்.கொரோனா தொற்று தாக்கும் வரை, எல்லாம் நன்றாகவே இருந்தது. ஒன்றரை ஆண்டுக்கு முன் தொற்று பரவி, ஊரடங்கு அமல் செய்யப்பட்டது முதல் காய்கறிகளுக்கு, போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது.

இது மட்டுமின்றி, பந்தல் பயிர் பராமரிப்புக்கு, போதிய எண்ணிக்கையில் ஆட்களும் கிடைப்பதில்லை. தொடர்ந்து மாதக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகள், ஒவ்வொருவராக பந்தல் சாகுபடியை, கைவிட ஆரம்பித்துள்ளனர்.மதுக்கரை வட்டாரம் க.க.சாவடியை சேர்ந்த விவசாயி செந்தில் குமார் கூறுகையில், ''பந்தல் பயிர்களை காட்டிலும், உத்தரவாதமான வருமானம் என்பதும், பராமரிக்க ஆட்கள் தேவையில்லை என்பதும், தென்னைக்கு மாற முக்கிய காரணங்கள்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X