பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி?

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : ''உயர்கல்வி சேர்க்கையில், பொறியியல் பிரிவில் சேரவுள்ள மாணவர்கள் கல்லுாரி தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. கல்லுாரி தேர்வு, படிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து,

கோவை : ''உயர்கல்வி சேர்க்கையில், பொறியியல் பிரிவில் சேரவுள்ள மாணவர்கள் கல்லுாரி தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. கல்லுாரி தேர்வு, படிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, பெற்றோர், மாணவர்கள் தரப்பில், பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது: அண்ணா பல்கலையின் கீழ், 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. கல்லுாரிகளின் தரம் அடிப்படையில், 10 சதவீத கல்லுாரிகள் மிகவும் நன்று, 20 சதவீதம் நன்று, 40 சதவீத கல்லுாரிகள் சராசரி 20 சதவீதம் தரமற்றது, 20 சதவீதம் மிகவும் தரமற்றது என்று வகைப்படுத்தலாம்.

மொத்தமுள்ள கல்லுாரிகளில், 40 சதவீத கல்லுாரிகள், சேர்க்கைக்கு தகுதியற்றவை. இதனால், கல்லுாரியை தேர்வு செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். முதலில் மாணவர்கள் தாங்கள், எந்த துறையில் ஆர்வமாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். எந்த பாடத்தில் பலம் அதிகம், எந்த பாடம் நமக்கு பலவீனம் என்பதை புரிந்து கொள்வது முக்கியம்.கணிதம், அறிவியல் பாடங்களில், 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று இருந்தால், பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்வது சரியான தேர்வு அல்ல. கலை, அறிவியல், வணிக படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். துறையை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

கல்லுாரிகளை நேரடியாக சென்றும், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள் மூலமும் கல்லுாரி சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டு, முதல் ஐந்து கல்லுாரிகளை சுய பட்டியலிட வேண்டும்.வளாகங்களை நேரடியாக சென்று பார்க்க வேண்டியது அவசியம். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவு என்பதால் மிகவும் கவனமுடன், தெளிவுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். துறையை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கல்லுாரிகளை நேரடியாக சென்றும், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள் மூலமும் கல்லுாரி சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டு, முதல் ஐந்து கல்லுாரிகளை சுய பட்டியலிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X