12.5 டன் ரேஷன் அரிசி பதுக்கல் பறக்கும் படையினர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12.5 டன் ரேஷன் அரிசி பதுக்கல் பறக்கும் படையினர் பறிமுதல்

Added : ஜூலை 22, 2021
Share
திருப்பூர் : திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 12.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் வந்தது. உடனே, மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும்படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, பூட்டியிருந்த ஒரு

திருப்பூர் : திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 12.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் வந்தது. உடனே, மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும்படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, பூட்டியிருந்த ஒரு வீட்டை திறந்து பார்த்தபோது, வீடு முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாக்குடன் வாங்கி வரும் ரேஷன் அரிசியை, வேறு 50 கிலோ பையில், 'பேக்கிங்' செய்து வைக்கப்பட்டிருந்தது.

பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், 'தலா, 50 கிலோ என்ற அளவில், 250 மூட்டைகள் (12.5 டன்) பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக கணக்கிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். ரேஷன் அரிசியை கடத்தி, பதுக்கிய நபர்கள் மீது, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பர்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X