கோர்ட்டில் பணி காலியிடம் வரும் 31ல் எழுத்து தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் பணி காலியிடம் வரும் 31ல் எழுத்து தேர்வு

Added : ஜூலை 22, 2021
Share
கோவை : நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 3,557 பணியிடத்திற்கு, வரும் 31ம் தேதி தேர்வு நடக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும், காலியாகவுள்ளஅலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவு காவலர், மசால்ஜி, துப்புறவு பணியாளர் உட்பட மொத்தம், 3,557 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கோவை உட்பட பல்வேறு மாவட்ட நீதித்துறையில், பல்வேறு

கோவை : நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 3,557 பணியிடத்திற்கு, வரும் 31ம் தேதி தேர்வு நடக்கிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும், காலியாகவுள்ளஅலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவு காவலர், மசால்ஜி, துப்புறவு பணியாளர் உட்பட மொத்தம், 3,557 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கோவை உட்பட பல்வேறு மாவட்ட நீதித்துறையில், பல்வேறு பதவிகளுக்கு, தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைன் வாயிலாக கடந்த, 9 வரை விண்ணப்பம் பெறப்பட்டது.எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, வாய்மொழி தேர்வு அடிப்படையில், தேர்வு நடைபெறுகிறது.

முதல் கட்ட எழுத்து தேர்வு வரும் 31ல், கோவை, சென்னை, விழுப்புரம், கடலுார், வேலுார், சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடக்கிறது.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், விண்ணப்பித்தவர்களுக்கு, கோவையில் தேர்வு நடைபெறும். தேர்வு எழுதும் இடம் பற்றிய விவரம், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X