பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நோய் தொற்று எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு 

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : தடுப்பூசிகள் வாயிலாக கோவை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், கடந்த மாதம் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.அதன்படி கோவையில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மசகவுண்டன்

கோவை : தடுப்பூசிகள் வாயிலாக கோவை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், கடந்த மாதம் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.அதன்படி கோவையில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மசகவுண்டன் செட்டிபாளையம், தொண்டாமுத்தார், பேரூர், துடியலுார், வெள்ளலுார் மற்றும் மாநகராட்சி பகுதிகள் என மொத்தம், 400 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வுகளின் முடிவில், நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றலானது, இந்திய அளவில் 67.7 சதவீதமாக பதிவாகியிருப்பது தெரியவந்தது.

அதேசமயம், மாநில சுகாதார துறை ஆய்வில், கோவையில் 40 சதவீதம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சதவீதமானது, தமிழகத்தில் திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தடுப்பூசிகள் மூலம் பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் வாயிலாக, மந்தை நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியும். அந்தவகையில், கோவையில் கையிருப்பை கொண்டு, தடுப்பூசி போடும் பணிகளை அதிகரித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X