ஒப்பந்த விதிகள் மீறல் : அதானி மீது ஏ.ஏ.ஐ., புகார்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : விமான நிலையங்களை நிர்வகிப்பது பெயர் லோகோ பொறிப்பது ஆகிய விஷயங்களில் அதானி குழுமம் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாக ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.நாட்டில் முக்கியமான விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. இதன்படி கடந்த ஆண்டு நடந்த டெண்டரில் உத்தர

புதுடில்லி : விமான நிலையங்களை நிர்வகிப்பது பெயர் லோகோ பொறிப்பது ஆகிய விஷயங்களில் அதானி குழுமம் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாக ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.



latest tamil news



நாட்டில் முக்கியமான விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. இதன்படி கடந்த ஆண்டு நடந்த டெண்டரில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ; கர்நாடக மாநிலம் மங்களூரு; குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற்றது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் மூன்று விமான நிலையங்களையும் அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் விமான நிலையங்களில் பெயர் மற்றும் லோகோ பொறிப்பது தொடர்பான ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.


latest tamil news



இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. இதையடுத்து தலா நான்கு பேர் அடங்கிய மூன்று கமிட்டியை அமைத்த ஏ.ஏ.ஐ., மூன்று விமான நிலையங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.மூன்று கமிட்டிகளும் தாக்கல் செய்த அறிக்கையில் 'மூன்று விமான நிலையங்களின் நுழைவு வாயில்களிலும் வெளியேறுவதற்கான சாலைகளிலும் அதானி நிறுவனத்தின் பெயரும் லோகோவும் அடங்கிய போர்டுகள் தான் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.
இங்கு இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயர் மற்றும் லோகோ இடம் பெறவில்லை. இது ஒப்பந்த விதிகளை மீறிய செயல். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 'ஒப்பந்த விதிகளின்படி ஏ.ஏ.ஐ.யின் பெயர் மற்றும் லோகோவை பயணியருக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்' என அதானி குழுமத்துக்கு ஏ.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூலை-202115:03:24 IST Report Abuse
தமிழவேல் ISO 9001 - 2008 எதற்கு இவ்வளவு பெரிய கொட்டை எழுத்தில் போட்டு குழப்ப வேண்டும் ? ஒரு ஓரத்தில் சிறியதாக அல்லது நுழைவு சுவற்றில் போடலாமே...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூலை-202115:01:14 IST Report Abuse
தமிழவேல் ஒப்பந்தம் தந்தவர்கள் இதையெல்லாம் பார்த்து அனுமதி தருவதில்லையா ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-ஜூலை-202108:41:03 IST Report Abuse
duruvasar ஜெலுசில்.வியாபார சங்த்தினர்கள் அதானிக்கு எதிராக போராடலாம். ஆனால். நேற்று முன்தினம்தான் விடியல் நாயகன் அதானியுடன் தமிழகத்தில் தொழில் தொடங்க புரியுணர்வு ஒப்பந்தம் போட்டிருகக்கிறார். எனவே அதானி கார்பரேட் டா இல்லை சாமனியனா என தீர்மானித்து வார்த்தைகளை உபயோகித்து செயல்படுங்கள்‌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X