சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சரக்கு'களில் முன்னுரிமை: ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சென்னை : 'குறிப்பிட்ட மது வகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விற்க கூடாது' என, ஊழியர்களை, 'டாஸ்மாக்' அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,330 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.சில நிறுவனங்கள், மதுக்கடை ஊழியர்கள் மற்றும்

சென்னை : 'குறிப்பிட்ட மது வகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விற்க கூடாது' என, ஊழியர்களை, 'டாஸ்மாக்' அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,330 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.சில நிறுவனங்கள், மதுக்கடை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தை சரிக்கட்டி, தங்களின் மது வகைகளை முன்னுரிமை அளித்து விற்குமாறு கூறுகின்றன. இதனால், 'குடி'மகன்கள் விரும்பும் மது வகைகள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுகின்றன.

இந்நிலையில், குறிப்பிட்ட மது வகைகளை விற்க முன்னுரிமை அளிக்கக் கூடாது என கடை ஊழியர்களை, டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது.டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மது கடைகளில் 90 நாட்களுக்கு மேல் விற்கப்படாமல் இருப்பில் உள்ள மது வகைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும்; குறிப்பிட்ட மது வகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விற்க கூடாது; வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து மது வகைகளையும் விற்க ஊழியர்களை அறிவுறுத்துமாறு, மாவட்ட மேலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க தொடர் ஆய்வு மேற்கொள்ளுமாறும்; கடைகளை திறக்கும் போது மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் இருப்பதை உறுதி செய்ய, அவர்களின் புகைப்படத்தை எடுத்து, அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும்; பணிக்கு வராத மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தவிர, முறைகேட்டில் ஈடுபடும் மாவட்ட மேலாளர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X