புதுச்சேரியில் வீட்டில் பதுக்கிய 4 உலோக சிலைகள் பறிமுதல்; தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில், நகராட்சி ஊழியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 உலோக சிலைகளை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி வாழைக்குளம், அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 47; புதுச்சேரி நகராட்சி அலுவலக காவலாளி. இவரது வீட்டில், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
 புதுச்சேரியில் வீட்டில் பதுக்கிய 4 உலோக சிலைகள் பறிமுதல்; தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

புதுச்சேரி-புதுச்சேரியில், நகராட்சி ஊழியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 உலோக சிலைகளை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி வாழைக்குளம், அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 47; புதுச்சேரி நகராட்சி அலுவலக காவலாளி. இவரது வீட்டில், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கதிரவன் தலைமையிலான குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர்.வாழைக்குளத்தில் உள்ள சுரேஷ் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு, உலோகத்தால் செய்யப்பட்ட 3.5 அடி மற்றும் 2 அடி உயர நடராஜர் சிலைகள், 3 அடி மற்றும் 1.5 அடி உயரத்தில் அம்பாள் சிலைகள் பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். நான்கு சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.சோதனையின்போது, சுரேஷ் குடும்பத்தினர், இந்த சிலைகள் அனைத்தும் பித்தளை சிலைகள்; காசியில் இருந்து வாங்கி வரப்பட்டவை என கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சிலைகள் வாங்கியதற்கான ரசீதுகள் இருப்பதாகவும் கூறினர். சிலைகளை எடுத்துச் சென்ற தமிழக போலீசாரின் வாகனத்தையும் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்க கொண்டு சென்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கதிரேசன் கூறியதாவது:புதுச்சேரியில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சுரேஷ் வீட்டில் சோதனை செய்தோம். அங்கு நடராஜர் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சிலைகள், 30 முதல் 40 கிலோ எடை கொண்டவை.ஐம்பொன் சிலைகளா என கண்டறிய, ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவுக்கு பின்பு, சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையிலான போலீசார் தனிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்றவர்களை விசாரித்ததில் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 8ம் தேதி 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு உலோக சிலைகளை திருடி கண்மாய்க்குள் புதைத்து வைத்தது தெரிந்தது.சேதப்படுத்திய 3 மற்றும் 1 அடி நடராஜர் சிலைகள், 2.5 அடி சிவகாமி, 1 அடி மாணிக்கவாசகர் சிலைகள் மீட்கப்பட்டன. 19 - 29 வயதுள்ள ஆறு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X