பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து படகில் சென்று கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பருவ மழையை முன்னிட்டு, கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, படகில் சென்று கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். பருவ மழையை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பருவ

பரங்கிப்பேட்டை-பருவ மழையை முன்னிட்டு, கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, படகில் சென்று கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். பருவ மழையை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பருவ மழையை எதிர்க்கொள்ள தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடலுார் துறைமுகத்தில் இருந்து, கிள்ளை முடசல் ஓடை வரை கடலோரப் பகுதிகளில், கலெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் நேற்று படகில் சென்று மிக தாழ்வான பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் வடிகால்கள் மூலமாக மழைநீர் கடலுக்கு செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளத்திற்கு வந்து படகில் இருந்து கீழே இறங்கி, மீன் இறங்கு தளம் பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங், பவன்குமார் ஜி. கிரியப்பவனர், மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், தாசில்தார்கள் ஆனந்த், அன்பழகன், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X