ரேஷன் கடைகளில் இலவச அரிசி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரேஷன் கடைகளில் இலவச அரிசி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

Added : ஜூலை 22, 2021
Share
வில்லியனுார்-புதுச்சேரி ரேஷன் கடைகளில், மக்களுக்கு இலவச அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறை அமைச்சரிடம், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் கோரிக்கை விடுத்தார்.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார், கடந்த 3 நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ளார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து

வில்லியனுார்-புதுச்சேரி ரேஷன் கடைகளில், மக்களுக்கு இலவச அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறை அமைச்சரிடம், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் கோரிக்கை விடுத்தார்.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார், கடந்த 3 நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ளார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய சிறுபான்மை விவகார துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கலாசாரம் மற்றும் பிராந்திய வளரச்சி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரை சந்தித்து பேசினார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவையும் சந்தித்தார்.அவர்களிடம், புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் தனது துறை மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து, வலியுறுத்தினார்.நேற்று, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை, சந்தித்துப் பேசினார்.அப்போது, புதுச்சேரியில் மக்களுக்கு இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் முறையை மாற்றி, ரேஷன் கடைகளில் அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அது தொடர்பாக, மனுவும் அளித்தார். மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து ஒப்புதல் அளிக்கப்படும் என, மத்திய அமைச்சர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X