பொது செய்தி

இந்தியா

நாளை முதல் இரு நாட்களுக்கு மீண்டும் தடுப்பூசி திருவிழா

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் மீண்டும் இரு நாட்களுக்கு, 100 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி, கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, கவர்னர் தமிழிசை உத்தரவின்படி, இரு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்

புதுச்சேரி-புதுச்சேரியில் மீண்டும் இரு நாட்களுக்கு, 100 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி, கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, கவர்னர் தமிழிசை உத்தரவின்படி, இரு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.நாளை 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில், 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது.இதில், இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களின் வீட்டிற்கே நடமாடும் மருத்துவக் குழுவினர் சென்று, மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இத்தகவலை சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X