'சைடிஷ்'க்கு பணம் கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
காரைக்கால் -காரைக்காலில், 'சைடிஷ்' வாங்கியதற்கு பணம் கேட்ட கடைக்காரரை தாக்கி, ரகளையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வினோத்,28; யுவராஜ், 30. திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன்,27. மூவரும், வாஞ்சூர் பகுதியில், தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் வாஞ்சூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்

காரைக்கால் -காரைக்காலில், 'சைடிஷ்' வாங்கியதற்கு பணம் கேட்ட கடைக்காரரை தாக்கி, ரகளையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வினோத்,28; யுவராஜ், 30. திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன்,27. மூவரும், வாஞ்சூர் பகுதியில், தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் வாஞ்சூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில் வாங்கினர்.அருகில் கடை வைத்துள்ள வாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த அஜிஸ்,40, என்பவரிடம், 'சைடிஷ்' வாங்கினர். அதற்கு பணம் தராமல், மூவரும் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.சைடிஷ் வாங்கியதற்கான பணத்தை கேட்ட அஜிசை, மூவரும் சேர்ந்து தாக்கினர். மேலும், அவ்வழியாக சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, ரகளையில் ஈடுபட்டனர்.அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து, திருப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அஜிஸ் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிந்து வினோத் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அஜிஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X