பொது செய்தி

இந்தியா

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பாகூர்-பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் சதீஷ்கோஸ் வரவேற்றார். போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா கோத்ரா, தெற்கு எஸ்.பி., லோகேஸ்வரன், மருத்துவ மாணவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது, கஞ்சா

பாகூர்-பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் சதீஷ்கோஸ் வரவேற்றார். போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா கோத்ரா, தெற்கு எஸ்.பி., லோகேஸ்வரன், மருத்துவ மாணவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விடும். கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்களில் பலர் மனநல பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்தால் தன்னம்பிக்கை குறைவதுடன், வேலைத் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இளம் குற்றவாளிகள் உருவாக போதை பழக்கமும் ஒரு காரணம். இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு மிக அவசியம் என,வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் வரதராஜன், துணை முதல்வர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X