பொது செய்தி

இந்தியா

மீன்வள மசோதாவை தடுத்து நிறுத்த தி.மு.க., அமைப்பாளர் கோரிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள, இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டும்' என முதல்வருக்கு, தி.மு.க., வடக்கு மண்டல அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல்சார் மீன்வள மசோதா -2021ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.மத்திய அரசால்

புதுச்சேரி-'மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள, இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டும்' என முதல்வருக்கு, தி.மு.க., வடக்கு மண்டல அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல்சார் மீன்வள மசோதா -2021ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில், சில பிரிவுகள் மீனவர்களுக்கு எதிரானவையாக உள்ளன. குறிப்பாக, மீனவர்கள் மீது குற்றம் சுமத்துதல், சிறையில் அடைத்தல், கட்டணம் மற்றும் அபராதம் விதித்தல் போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இது பரவலாக மீனவர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.அதனால், தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி, அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனை பெற்ற பிறகு, புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.அதுபோல, புதுச்சேரி முதல்வரும், நமது மாநில மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றும் முயற்சியை தடுத்து நிறுத்திட வேணடும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X