பொது செய்தி

இந்தியா

ரூ. 300 கோடியில் புதிய சட்டசபை தேவையற்றது : மாநில காங்., தலைவர் கருத்து

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'புதுச்சேரியில் ரூ. 300 கோடி செலவில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவது தற்போதைக்கு தேவையற்றது' என மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தெரிவித்தார். அவர் நேற்று அளித்த பேட்டி:இஸ்ரேல் நாட்டின் உளவு பார்க்கும் சாப்ட்வேர் மூலம், நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரின் மொபைல்போன் பேச்சு ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்னைகளை

புதுச்சேரி-'புதுச்சேரியில் ரூ. 300 கோடி செலவில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவது தற்போதைக்கு தேவையற்றது' என மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தெரிவித்தார். அவர் நேற்று அளித்த பேட்டி:இஸ்ரேல் நாட்டின் உளவு பார்க்கும் சாப்ட்வேர் மூலம், நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரின் மொபைல்போன் பேச்சு ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்னைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி, கடந்த 2019ம் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இதை கண்டித்து இன்று 22ம் தேதி, காமராஜர் சாலை ராஜா தியேட்டரில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஏழை மக்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். புதுச்சேரியில் ரூ. 300 கோடியில் புதிய சட்டசபை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதனால், தற்போதைக்கு சட்டசபை தேவையற்றது. தேவையென்றால், சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் தி பாண்டி மற்றும் சுகாதார துறை இயக்குநர் அலுவலக வளாகத்தை இணைத்து, விரிவுபடுத்தலாம். மாநில நிதி இன்றி, முழுவதும் மத்திய அரசு நிதியால் சட்டசபை கட்டினால் ஆட்சேபனை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X