பொது செய்தி

இந்தியா

ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து, அரிசி உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கைவிடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் 510 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. இவற்றின் மூலம் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.முன்னாள் கவர்னர் கிரண்பேடி,

புதுச்சேரி-'தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து, அரிசி உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கைவிடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் 510 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. இவற்றின் மூலம் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.முன்னாள் கவர்னர் கிரண்பேடி, தன்னிச்சையாக, அரிசிக்கு பதில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுத்தார்.இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 40 மாதங்களாக சம்பளமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், தி.மு.க.,வின் கருத்துப்படி, ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு நேரடியாக அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார்,ரங்கசாமி.முதல்வர் பதவியேற்று மூன்று மாதங்கள் முடிய உள்ளது. இதுவரை ரேஷன் கடைகளை திறக்கவில்லை. அரிசியும் வழங்கப்படவில்லை. அதேசமயம் மத்திய அரசின் கொரோனா நிவாரண அரிசி, பள்ளிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.உடனடியாக ரேஷன் கடைகளை திறந்து, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளையும் குடிமைப்பொருள் வழங்கல்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை, துறை ஊழியர்களாக மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X