போலீஸ் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரித்த 7 பேர் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்த 7 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 60. இவருக்கு, புதுச்சேரி அடுத்த பட்டானுார் அருகே 2400 சதுரடி அளவுள்ள இரண்டு மனைகள் உள்ளன.இந்த மனைகளை, கடந்தாண்டு செப்., மாதம் லாஸ்பேட்டை ஏழுமலை பெயரில், வானுார் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திரப் பதிவு

புதுச்சேரி-போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்த 7 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 60. இவருக்கு, புதுச்சேரி அடுத்த பட்டானுார் அருகே 2400 சதுரடி அளவுள்ள இரண்டு மனைகள் உள்ளன.இந்த மனைகளை, கடந்தாண்டு செப்., மாதம் லாஸ்பேட்டை ஏழுமலை பெயரில், வானுார் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.தனக்குத் தெரியாமல் பத்திரப்பதிவு நடந்ததை அறிந்து, கலியபெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இந்த மோசடி தொடர்பாக விசாரித்தார்.கலியபெருமாள் பெயரில் போலியான ஆதார் அட்டை, புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., அலுவலக சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழங்கியது போன்று, போலியாக 'மிஸ்சிங்' சான்றிதழ் தயாரித்து, பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது.தனது பெயரில் போலியாக மிஸ்சிங் சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தொடர்பாக, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிறப்பு அதிரடிப்படை போலீஸ் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.இவ்வழக்கில், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பாலமுருகன், 38; சித்தார்த், 45; நாவற்குளம் கோபால், 45; மஞ்சினி, 55; ஏழுமலை, 45; நாகராஜ், 44; லாஸ்பேட்டையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் அருள், 35; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:கலியபெருமாளின் சொத்து பத்திரம் தொலைந்ததாக, போலியான 'மிஸ்சிங்' சான்றிதழ், போலியாக ஆதார் கார்டு தயாரித்துள்ளனர்.அந்த சான்றிதழ்களை கொண்டு, 'டூப்ளிகேட்' பத்திரம் வாங்கியுள்ளனர்.பின்பு, கலியபெருமாளின் மனைகளை, லாஸ்பேட்டை ஏழுமலை பெயருக்கு மாற்றி, விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கும்பல் புதுச்சேரியில் மட்டுமின்றி, தமிழக பகுதியிலும் போலி சான்றிதழ் அளித்து, மனைகளை விற்று ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X