கிரைம் செய்திகள்...

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
போன், பைக் அபேஸ்திண்டிவனம்: பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 34; டிங்கரிங் ஒர்க்ஸ் ஷாப் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன், திருப்பதிக்கு சென்றிருந்தபோது, ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பெயர் மட்டுமே தெரிந்த அந்த நபர் திண்டிவனம் வந்து, பார்த்திபனை சந்தித்தார். அப்போது தனது மனைவியிடம் பேச வேண்டும் என போனை வாங்கி பேசினார். பின்னர், மனைவிக்கு உடல்நிலை

போன், பைக் அபேஸ்திண்டிவனம்: பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 34; டிங்கரிங் ஒர்க்ஸ் ஷாப் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன், திருப்பதிக்கு சென்றிருந்தபோது, ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பெயர் மட்டுமே தெரிந்த அந்த நபர் திண்டிவனம் வந்து, பார்த்திபனை சந்தித்தார். அப்போது தனது மனைவியிடம் பேச வேண்டும் என போனை வாங்கி பேசினார். பின்னர், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அவசரமாக கூறி விட்டு பார்த்திபனின் பைக்கை வாங்கிக் கொண்டு மொபைல் போனையும் திருப்பித் தராமல் சென்றவர் வெகுநேரம் வரை வரவில்லை.பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.தாய் கண்டிப்பு: மகன் தற்கொலைவிழுப்புரம்: காணை அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் மரியலுாயிஸ் மகன் விக்டர் ஆனந்தராஜ், 25; இவர், கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் இவர் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததால், தாய் ஆரோக்கியமேரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விக்டர் ஆனந்தராஜ், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மொபைல் போன் பறிப்புவளவனுார்: கொங்கம்பட்டைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி, 32; 'ஏசி'மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரி மாநிலம், மடுகரையில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, கொங்கம்பட்டு அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து நிறுத்தி, ஸ்க்ரூ டிரைவரால் சிவமூர்த்தியை தாக்கி மொபைல் போனை பறித்துச் சென்றனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.வயிற்று வலி: ஒருவர் தற்கொலைஅவலுார்பேட்டை: வளத்தி அடுத்த நெகனுார் வடகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி, 55; இவருக்கு ஒரு ஆண்டாக வயிற்று வலி இருந்த நிலையில் கடந்த 18ம் தேதி மீண்டும் வயிற்று ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் துரைசாமி இறந்தார். வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.வட்டி கேட்டு மிரட்டியவர் கைதுவிழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 30; இவர், அப்பகுதியைச் சேர்ந்த பிரபு, 44; என்பவரிடம் ஒரு மாதத்திற்கு முன் 10 பைசா வட்டிக்கு 5,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை வட்டியோடு 5,500 ரூபாயாக ஜெயபிரகாஷ் கொடுத்துள்ளார். மேலும் 500 ரூபாய் கேட்டு ஜெயபிரகாஷின் மொபைல் போனை பிடுங்கிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனர்.தீக்குளித்தவர் சாவுரிஷிவந்தியம்: நுாரோலையைச் சேர்ந்தவர் கார்த்திக் கொளஞ்சி, 47; கூலித் தொழிலாளி. கடந்த மாதம் ஜூன் மாதம் 16ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் நேற்று இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.நண்பருக்கு கத்தி வெட்டுதிருவெண்ணெய்நல்லுார்: தென்மங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 32; இவரது நண்பர் பரசுராமன். இருவரும் கொத்தனார். இருவரும் ஒன்றாக வேலைக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களாக பரசுராமனை, ரஞ்சித் வேலைக்கு அழைத்துச் செல்லவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பரசுராமன், தென்மங்கலம் மாதா கோவில் அருகே நின்றிருந்த ரஞ்சித்தை தாக்கி கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடினார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பரசுராமனை தேடி வருகின்றனர்.மனைவி மாயம்: கணவர் புகார்திருவெண்ணெய்நல்லுார்: பேரங்கியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ராஜலட்சுமி, 28; இவர்களுக்கு ராகேஷ், 9; ராதிகா, 8; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 13ம் தேதி இரவு முதல் ராஜலட்சுமியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.லாரி மோதி தொழிலாளி பலிவிக்கிரவாண்டி: ஒரத்துார், நத்தமேட்டைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 47: சுமை துாக்கும் தொழிலாளி. இவர், ஒரத்துாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைதுதிண்டிவனம்: மரக்காணம் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் அபிநய வெங்கடேசன், 32; கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோட்டைமேடு பகுதியில் பைக்கில் சென்றபோது, முன்விரோதம் காரணமாக 3 பேர் வெட்டி கொலை செய்ய முயன்றனர். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோ டிரைவர் காளி, 32; என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதன், 29; ஏழுமலை, 21; ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் போலீசார் கைது செய்தனர்.நகை திருடிய நபர் கைதுகண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலையாண்டி, 75; இவர் கடந்த மே 16ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து கண்டமங்கலத்திற்கு வாடகை காரில் வந்தார். காரை விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், 43; ஓட்டினார். வீட்டிற்கு வந்த சுடலையாண்டி பையை பார்த்தபோது, 2 சவரன் நகை, 5,500 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து குமாரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஆழியூர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்து, 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சாராயம் விற்றவர் கைதுமரக்காணம்: ஊரணி, பாலக்காடு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சாராயம் பதுக்கி விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண் தலைமையில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து, சாராயம் பதுக்கிய கழிக்குப்பத்தைச் சேர்ந்த கருப்புராஜா, 48; என்பவரை கைது செய்து, 300 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.தகராறு: 7 பேர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: சித்தானங்கூர் (மதுரா) கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன், 32; குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. கடந்த 10ம் தேதி இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மணிகண்டன், தனலட்சுமி, சந்திரா, சிவராமன், ஜோதி, சுப்ரமணியன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.வேன் மோதி ஒருவர் பலிகண்டமங்கலம்: புதுச்சேரி, உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் யோகவெங்கடேசன், 22; திருவண்டார்கோவிலில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணியை முடித்து விட்டு, பைக்கில் புதுச்சேரி மார்க்கமாக சென்றார். கண்டமங்கலம் அருகே வந்த போது, பைக் மீது வேன் மோதியது. இதில், யோகவெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கண்டமங்கலம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சமத்துவபுரத்தில் திருட்டுமரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பெரியகொழுவேரியில் சமத்துவபுரம் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. அங்கு கட்டுமான பொருட்கள் வைத்திருந்த வீட்டின் பூட்டை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பெயிண்ட், மின் ஒயர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X