பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் பெயர் பலகை விவகாரம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அம்பேத்கர் படம் கொண்ட பெயர் பலகை பிரச்னை தொடர்பாக நடந்த சமாதான கூட்டம் சுமூக தீர்வு ஏற்படாததால் ஒத்தி வைக்கப்பட்டது.விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் கடை வீதியில் அம்பேத்கர் படம் கொண்ட பெயர் பலகை கோர்ட் உத்தரவுபடி அரசு அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி., கட்சியினரும், பலகையை

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அம்பேத்கர் படம் கொண்ட பெயர் பலகை பிரச்னை தொடர்பாக நடந்த சமாதான கூட்டம் சுமூக தீர்வு ஏற்படாததால் ஒத்தி வைக்கப்பட்டது.விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் கடை வீதியில் அம்பேத்கர் படம் கொண்ட பெயர் பலகை கோர்ட் உத்தரவுபடி அரசு அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி., கட்சியினரும், பலகையை அகற்றக் கோரி வியாபாரிகளும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மீண்டும் கோர்ட் உத்தரவு பெற இரு தரப்பினரும் சென்றனர்.கோர்ட் உத்தரவு படி நேற்று, விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.நீண்ட நேர பேச்சுவார்த்தை நடந்தும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால், சமாதான கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ., முபாரக் அலி பேக், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சங்கர வடிவேல், வருவாய் ஆய்வாளர் ரஜேஷ், வி.ஏ.ஓ., கவுசல்யா, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X