ஆடி மாதத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி மாதத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

Added : ஜூலை 22, 2021
Share
திண்டிவனம்-ஆடி மாதத்தை முன்னிட்டு, திண்டிவனத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.திண்டிவனம் மலர் அங்காடியில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அனைத்து வகை பூக்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.ஆடி மாதம் துவங்கியதால் அதிகளவில் விசேஷம் நடப்பது வழக்கம். இதன் காரணமாக ஆடி மாதத்திற்கு முன் பூக்களின் விலை குறைவாக இருந்த நிலையில், ஆடி மாதம்

திண்டிவனம்-ஆடி மாதத்தை முன்னிட்டு, திண்டிவனத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.திண்டிவனம் மலர் அங்காடியில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அனைத்து வகை பூக்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.ஆடி மாதம் துவங்கியதால் அதிகளவில் விசேஷம் நடப்பது வழக்கம். இதன் காரணமாக ஆடி மாதத்திற்கு முன் பூக்களின் விலை குறைவாக இருந்த நிலையில், ஆடி மாதம் துவங்கியதிலிருந்து அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்தன.ஆடி மாதத்திற்கு முன் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி நேற்று 200 ரூபாய்க்கும், 100க்கு விற்ற முல்லை 150 ரூபாய்க்கும் விற்பனையானது.அதே போல் 300க்கு விற்ற கனகாம்பரம் 600 ரூபாய்க்கும், 30க்கு விற்ற சம்பங்கி 120 ரூபாய்க்கும், 60க்கு விற்ற சாமந்தி 100 ரூபாய்க்கும், 20க்கு விற்ற கோழிக்கொண்டை 40 ரூபாய்க்கும், 40க்கு விற்ற ரோஸ் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்ட போது, ஆடி மாதம் துவங்கியதாலும், பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துவிட்டது என தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X