பஸ் மீது லாரி மோதல் 14 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மீது லாரி மோதல் 14 பேர் படுகாயம்

Added : ஜூலை 22, 2021
Share
திண்டிவனம்-திண்டிவனத்தில் லாரியின் பின்னால் தனியார் பஸ் மோதியதில் 14 பேர் காயமடைந்தனர்.காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை 9:00 மணிக்கு தனியார் பஸ் 35 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பஸ்சை வந்தவாசியைச் சேர்ந்த அக்பர், 37; ஓட்டினார். திண்டிவனம் செஞ்சி ரோடு அவரப்பாக்கத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போடப்பட்டதால், தனியார் பஸ் லாரி மீது

திண்டிவனம்-திண்டிவனத்தில் லாரியின் பின்னால் தனியார் பஸ் மோதியதில் 14 பேர் காயமடைந்தனர்.காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை 9:00 மணிக்கு தனியார் பஸ் 35 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பஸ்சை வந்தவாசியைச் சேர்ந்த அக்பர், 37; ஓட்டினார். திண்டிவனம் செஞ்சி ரோடு அவரப்பாக்கத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போடப்பட்டதால், தனியார் பஸ் லாரி மீது மோதியது.இதில், டிரைவர் அக்பர், 37; வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவளம் முருகன், 45; நெடுந்துறை ரவி, 57; உட்பட 14 பேர் காயமடைந்தனர். அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X