பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றி, தோல்வி சகஜம்தான்: 'மாஜி' அமைச்சர் பேச்சு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கோலியனுார் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், அவைத் தலைவர்கள் மனோகரன், சீத்தா கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில்,

விழுப்புரம்-கோலியனுார் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், அவைத் தலைவர்கள் மனோகரன், சீத்தா கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். நாம் எப்போதெல்லாம் தோல்வியை சந்திக்கிறோமோ, அதற்கு அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில், நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், அரவணைப்புடனும் செயல்பட வேண்டும்' என்றார்.தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜி, ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் அழகேசன், இணைச் செயலாளர் மஞ்சுளா சசிக்குமார், பேரவைச் செயலாளர் சிவா, இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஐ.டி.,பிரிவு செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் விஜயன், பாக்யராஜ், குமரவேல், பவானி தமிழ்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X