பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வுக்கு வருவோருக்கு கொரோனா சான்று அவசியம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி போலீஸ் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல், சிறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. ஏற்கனவே எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3794

கடலுார்-கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி போலீஸ் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல், சிறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. ஏற்கனவே எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3794 நபர்களுக்கு உடற்திறன் தேர்வு நடக்கிறது.அதற்கான பல்வேறு தேர்வுகளுக்கு அண்ணா விளையாட்டரங்கில் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. தேர்வர்கள், தேர்வில் பங்கேற்கும் தினத்திற்கு 4 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து மருத்துவ சான்றுடன் வர வேண்டுமென, எஸ்.பி., சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X