கிரைம் செய்திகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மகன் மாயம்: தந்தை புகார் புதுச்சத்திரம் அடுத்த குமராப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார், 20; கடலுாரில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 20 ம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மாணவரை தேடி

மகன் மாயம்: தந்தை புகார் புதுச்சத்திரம் அடுத்த குமராப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார், 20; கடலுாரில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 20 ம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மாணவரை தேடி வருகின்றனர்.மதுபாட்டில் விற்றவர் கைது கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் நேற்று ஓட்டிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த புதுராஜன், 75; கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, புதுராஜனை கைது செய்தனர்.சூதாடிய 5 பேர் கைதுவிருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று வயலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த சுதாகர், 31; அரிசந்திரன், 37; லெனின், 40; பிரபாகரன், 38 ; பாரதி நகர் ரஞ்சித், 21; ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சுதாகர், அரிச்சந்திரன் உள்ளிட்ட ஐவரையும் கைது செய்தனர்.செயலரை திட்டியவர் மீது வழக்குவிருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 43; ஊராட்சி செயலர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதுவெண்ணைக்குழியைச் சேர்ந்த சண்முகம், 36; ராஜலட்சுமியை ஆபாசமாக திட்டினார். புகாரின் பேரில், சண்முகம் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கார் மோதி 8 பேர் காயம் குள்ளஞ்சாவடி சந்திப்பு அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. நேற்று முன் தினம் அந்த பகுதியில் உள்ள சீனிவாசா திருமண மண்டபம் அருகே, 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கான்கிரீட் கலவை போட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலுாரில் இருந்து ஆண்டிமடம் சென்ற, வெள்ளை நிற ஹூண்டாய்-கிரீடா கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த பைக்குகள் மீது மோதி, அங்கு வேலை செய்த பணியாளர்கள் கூட்டத்தினுள் புகுந்தது.இதில், 8 பணியாளர்கள் காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரத்துார் பகுதியை சேர்ந்த பாஸ்கர், 47; மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீழ்ச்சாவடியை சேர்ந்த மதியழகன், 50; மருதுார், தலைக்குளம் பகுதியை சேர்ந்த, கருணா பிரகாஷ், 26; தட்சிணாமூர்த்தி, 27; சந்தோஷ்குமார், 29; சேகர், 57; ஜெயகுமார், 29; எல்லைக்குடியை சேர்ந்த, முருகன், 40; ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் நாய் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், காரில் பயணம் செய்த, 4 இளைஞர்கள் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.வழிப்பறி செய்தவர் கைதுகடலுார் மஞ்சக்குப்பம் கருமாரப்பேட்டையை சேர்ந்தவர் லோகநாதன் மகன் பன்னீர்செல்வம், 39; தச்சுத் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நடந்து சென்றார். அப்போது, மஞ்சக்குப்பம் சேட்டு நகரை சேர்ந்த மூர்த்தி மகன் ஜீவன்குமார், 24; என்பவர் பன்னீர்செல்வத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 300 பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். பன்னீர்செல்வம் கொடுத்த புகாரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து சேட்டு நகரில் பதுங்கி இருந்த ஜீவன்குமாரை நேற்று கைது செய்தனர்.வாலிபர் மாயம்பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி; இவரது மகன் ஐயப்பன்,24; கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 10ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ் ஐயப்பன் தாய் மீனா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து ஐயப்பனை தேடி வருகின்றனர்.சாலை விபத்தில் மூதாட்டி பலிபெண்ணாடம் அடுத்த வேட்டக்குடி காலனியைச் சேர்ந்த பஞ்சநாதன் மனைவி விருதாம்பாள், 71; இவர் நேற்று காலை 6:15 மணியளவில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரி மோதியது. அதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மணல் திருட்டு: மொபட் பறிமுதல்குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று ஆடுர் அகரம் பரவனாறு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பரவனாற்றில் மணல் அள்ளிய மேலபுதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு, 60, என்பவரை கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X