பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

Added : ஜூலை 22, 2021
Share
கடலுார்-பக்ரீத் பண்டிகையொட்டி, கடலுார் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. கடலுாரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன்ஹாலில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக . கடந்த ஆண்டு வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். நேற்று கடலுார் மஞ்சக்குப்பம், முதுநகர் உள்ளிட்ட அனைத்து பகுதி பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

கடலுார்-பக்ரீத் பண்டிகையொட்டி, கடலுார் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. கடலுாரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன்ஹாலில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக . கடந்த ஆண்டு வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். நேற்று கடலுார் மஞ்சக்குப்பம், முதுநகர் உள்ளிட்ட அனைத்து பகுதி பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். ஆனாலும் கடந்த காலங்களை போன்று உற்சாகமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.நெல்லிக்குப்பத்தில் வழக்கமாக 2,000 பேருக்கும் அதிகமானோர் பக்ரீத் அன்று காலை ஊர்வலமாக கொத்வாபள்ளியில் உள்ள பள்ளி வாசலுக்கு செல்வர். தற்போது கொரோனா ஊரடங்கால் ஊர்வலம் நடக்கவில்லை. நெல்லிக்குப்பம் கொத்வாபள்ளியில் உள்ள பள்ளி வாசலில் கூடி பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ஈதுகா மைதானத்தில், சிறப்பு கூட்டுத் தொழுகை நடந்தது. கொரோனா பரவலை தடுக்க அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X