உழவர் சந்தை எதிரே ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை எதிரே ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜூலை 22, 2021
Share
கடலுார்-கடலுார் உழவர் சந்தை எதிரே சாலையோரம் ஆக்கிரமித்திருந்த நடைபாதை கடைகளை போலீசார் அகற்றினர். கடலுார் உழவர் சந்தை எதிரே அனுமதியின்றி இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து தற்காலிக நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்துவதால், உழவர் சந்தை அருகே தினமும் கடும் போக்குவரத்து

கடலுார்-கடலுார் உழவர் சந்தை எதிரே சாலையோரம் ஆக்கிரமித்திருந்த நடைபாதை கடைகளை போலீசார் அகற்றினர். கடலுார் உழவர் சந்தை எதிரே அனுமதியின்றி இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து தற்காலிக நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்துவதால், உழவர் சந்தை அருகே தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், உழவர் சந்தை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைத்திருந்த தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடைகளை அதிரடியாக அகற்றினர். அப்பகுதியில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X