பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சிதம்பரம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பல்கலைக்கழக கோகலே அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அப்போது நிர்வாகிகள் சுப்பிரமணியன், அசோகன், செல்வராஜ், தனசேகரன், திருமால், செங்கல்வராயன் மற்றும் பலர் பங்கேற்றனர். அப்போது சிவகுருநாதன் கூறுகையில், இந்தியாவின் 93

சிதம்பரம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பல்கலைக்கழக கோகலே அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அப்போது நிர்வாகிகள் சுப்பிரமணியன், அசோகன், செல்வராஜ், தனசேகரன், திருமால், செங்கல்வராயன் மற்றும் பலர் பங்கேற்றனர். அப்போது சிவகுருநாதன் கூறுகையில், இந்தியாவின் 93 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 2 வது உண்டு உறைவிடப் பல்கலைக்கழகம் என்ற பாரம்பரியம் மிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இணைவுப் பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்க வேண்டும் என கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.கடந்த 2015ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட ஷிவதாஸ் மீனா, பல்கலையின் நிதி சிக்கல்களை, தீர்க்க அருகிலுள்ள மாவட்டக் கல்லுாரிகளை இணைத்து, இணைவுப் பல்கலைக் கழகமாக மாற்ற அப்போதைய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.இந்த பரிந்துரையையேற்று, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் கல்லுாரிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்க தி.மு.க., அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்துள்ளது.இதற்காக தமிழக முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விடியல் வந்துள்ளது. நிதி சிக்கல் விரைவில் தீர்க்கப்படும். துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X