பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடாததால் நாய்களுக்கு பரவுது 'பார்வோ வைரஸ்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், 'பார்வோ வைரஸ்' தொற்றால், வீட்டு செல்ல பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.காற்றின் வாயிலாக வேகமாக பரவும் 'கெனைன் பார்வோ வைரஸ்' தொற்று, விலங்குகளை மட்டுமே தாக்கும்; நாய்களுக்கு அதிகம் பரவும்.தொற்றால் பாதிக்கப்படும்
மழைக்காலம், பார்வோ வைரஸ், நாய்கள், தொற்று, அதிகரிப்பு, தடுப்பூசி, கால்நடை மருத்துவர்

சென்னை : மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், 'பார்வோ வைரஸ்' தொற்றால், வீட்டு செல்ல பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காற்றின் வாயிலாக வேகமாக பரவும் 'கெனைன் பார்வோ வைரஸ்' தொற்று, விலங்குகளை மட்டுமே தாக்கும்; நாய்களுக்கு அதிகம் பரவும்.தொற்றால் பாதிக்கப்படும் நாய்களுக்கு, சோர்வு, வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து பவரும் வைரஸ், பிற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் பாதிப்பில் இருந்து பிராணிகளை காப்பாற்றலாம்.பொதுவாக நாய்களுக்கு, மூன்று தவணை பரவுது வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பரவலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர், தங்களது செல்ல பிராணிகளை கவனிக்க இயலவில்லை.இதன் விளைவாக, நாய்களுக்கு, பார்வோ வைரஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.


latest tamil news


இதுகுறித்து, கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் கூறியதாவது: பார்வோ வைரஸ் பெரும்பாலும், மழைக் காலங்களில் வேகமாக பரவக்கூடியது. ஜூன், ஜூலை, நவ., டிச., மற்றும் ஜனவரி மாதங்களில், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.அந்த காலக்கட்டத்தில் சென்னையில், தினமும், 130 முதல், 150 நாய்கள் வரை, பார்வோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகிறது.

தற்போது, அந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறியதே, அதற்கு முக்கிய காரணம். ரேபிஸ் தடுப்பூசி, 50 ரூபாய்க்கு குறைவாகவும், பார்வோ வைரஸ் தடுப்பூசிகள், 300 ரூபாய்க்கு மேலும் விற்கப்படுகிறது. கொரோனா பொது முடக்கத்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பலர், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போட தவறிவிட்டனர்.பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், நம்மையே நம்பியிருக்கும் உயிர்களையும் காக்க வேண்டும்.

எனவே, செல்ல பிராணிகளுக்கு முறையான தடுப்பூசி செலுத்த வேண்டும்.நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamaraj dasan - Trichy,இந்தியா
22-ஜூலை-202109:29:00 IST Report Abuse
Kamaraj dasan இது வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மட்டுமா? அல்லது தெரு நாய்களுக்கும் பொருந்துமா? தெருநாய்களை யார் பராமரிப்பது. இது தெருநாய்களுக்கு பொருந்தாதெனில் வளர்ப்பு நாய்கள் பாதிக்கப்படுவது ஏன்? காரணம் தேட முற்பட்டால் பெரும்பாலான மனிதர்கள் ஏன் மருந்துகள், மருத்துவர்களை நம்பி வாழும் இன்றைய சூழலுக்கான விடை கிடைக்கும். வைரஸெல்லாம் அவைகளாக இயற்கையாங உருவாகவில்லை. அவை சமூகத்தில் ஏதோ ஒரு முறையில் பரப்பப்பட்டு பின்னர் அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இதற்கான மூலத்தை அறிய அரசுகள் முயற்சித்து அதை முறியடிக்க வேண்டும். தடுப்பூசிகளெல்லாம் நிரந்தர தீர்வல்ல. ஒரு கும்பல் அல்லது சில நாடுகளின் ரகசிய கூட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். இவர்கள் பிற நாடுகளின்/மக்களின் உழைப்பை / செல்வங்களை மறைமுகமாக நமது அரசியல்வாதிகளைவிட மோசமாக அபகரிக்கும் செயலை காலம் காலமாக செயல்படுத்தி வெற்றி பெருகின்றனர். இவர்கள் நல்லவர்கள் என்ற போர்வையிலும் இந்த சமூகத்தில் இருக்கலாம். எனவேதான் இவர்களை எவராலும் அணுக / கண்டுபிடிக்க இயலவில்லையோ? மேலேயுள்ளவை வெற்று யூகங்களல்ல. நடப்பவற்றை ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-202106:02:47 IST Report Abuse
RajanRajan நாய்களை தாக்கும் இந்த பார்வோ வைரஸ் ஏகதேசம் இந்த குரானா வைரஸ் போல பரவும் தன்மையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். நாட்டு நாய் வகைகள் கூட பாதிப்பாகிறது. எனது சிப்பாறை குட்டியும் உயிரிப்பாய் சந்தித்தது. கால்நடை மருத்துவமனைக்கு வரும் பார்வோ பதித்த நாய்களால் வேறு சிகிச்சைக்கு வரும் நாய்களுக்கும் பரவிவிடுகிறது. எனவே உடனடி மருத்துவம் குட்டிகளை மீட்டெடுத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X