போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

Added : ஜூலை 22, 2021
Share
போரூர்-'தினமலர்' செய்தி எதிரொலியாக, போரூர் ஏரியில் இருந்து குப்பை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகள் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டி நாறடித்து வந்தனர்.அதிரடிசமீபத்தில் இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு துறை மற்றும்

போரூர்-'தினமலர்' செய்தி எதிரொலியாக, போரூர் ஏரியில் இருந்து குப்பை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகள் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டி நாறடித்து வந்தனர்.அதிரடிசமீபத்தில் இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 15ம் தேதி ஏரியில் ஆய்வு செய்தனர். தொடர்ச்சியாக, மக்கள் நால்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் 17ம் தேதி, ஏரியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 'குப்பை கழிவுகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏரியை ஆழப்படுத்தி கரை அமைக்கப்படும்' என, அமைச்சர் உறுதியளித்தார்.தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏரியில் கொட்டப்பட்ட குப்பையை, இரண்டு லாரிகள் வாயிலாக அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.நம்பிக்கைபோரூரில் இருந்து குப்பை எடுத்து செல்லும் லாரிகளுக்கு, தலா, 450 ரூபாய் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், குப்பை அகற்றும் பணியின் திட்ட மதிப்பு அதிகமாகிறது.இந்த குப்பை அனைத்தும், கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இன்னும் சில வாரங்களில், ஏரியை சுத்தம் செய்து விடுவோம் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.போரூர் ஏரியில் இருந்து ஜே.சி.பி., மற்றும் இரண்டு லாரிகள் வாயிலாக, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு குப்பை எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக, சென்னை மாநகராட்சிக்கு முன்பணமாக, 6.3 லட்சம் ரூபாய் கட்டியுள்ளோம். 1 டன் குப்பைக்கு, 2,360 ரூபாய் செலத்துகிறோம். விரைவில் ஏரியை சுத்தம் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.ஜெயசுதா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்,காஞ்சிபுரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X