பட்டாசு உரிமையாளர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு உரிமையாளர் கூட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
சிவகாசி : சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரதிவிராஜ் தலைமை வகித்தார்.விபத்தில்லாமல் பட்டாசு தயாரிப்பது, தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.பட்டாசு உரிமையாளர்கள் தரப்பில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள்

சிவகாசி : சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரதிவிராஜ் தலைமை வகித்தார்.

விபத்தில்லாமல் பட்டாசு தயாரிப்பது, தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.பட்டாசு உரிமையாளர்கள் தரப்பில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

பட்டாசு தயாரிப்பில் மணி மருந்து பயன்பாட்டினை காலை 10:30 மணிக்கும் முடிப்பது, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டோம் என பட்டாசு உற்பத்தியாளர்கள் உறுதியளித்தனர்.தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் கணேசன், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் கண்ணன், தொழிலதிபர்கள் அபிரூபன், சன்சைன் கணேசன், சன் இந்தியா பிரம்மன், சுரேஷ், ராஜா கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X